Kani Mutham Pathinthathu Song Lyrics
Album | Yaar Jambulingam |
Composer(s) | D R Papa |
Singers | P Susheela, S P Balasubrahmaniyam |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 1972 |
-  
- Kani Mutham Pathinthathu Song Lyrics By Vaali
Kani Mutham Pathinthathu Song Lyrics in English
Female : Kani muththam pathinthathu kodi melae
Pani muththam pathinthathu malar melae
Male : Mugil muththam pathinthathu malai melae
Un mudhal muththam pathinthathen idhazh melae
Female : Kani muththam pathinthathu kodi melae
Pani muththam pathinthathu malar melae
Male : Mugil muththam pathinthathu malai melae
Un mudhal muththam pathinthathen idhal melae
Female : Vaa vaa ennai aadharikka nee vaa
Male : Vaa vaa ennai kadhalikka nee vaa
Female : Laa laa laa lalalalaa ha ha ha ha
Male : Aa....aa...aa...aa....aa.....aa....
Female : Poovizhiyaal oru oviyam
Varainthen kadhalan ullaththilae
Male : Punnagaiyaal oru kaaviyam
Varanthen kadhali nenjaththilae
Female : Poovizhiyaal oru oviyam
Varainthen kadhalan ullaththilae
Male : Punnagaiyaal oru kaaviyam
Varanthen kadhali nenjaththilae
Female : Ezhuthiya kavithaikku pareisennavo
Male : Koduppathai koduththaal suvaiyallavo
Female : Vaa vaa ennai aadharikka nee vaa
Male : Vaa vaa ennai kadhalikka nee vaa
Female : Kani muththam pathinthathu kodi melae
Pani muththam pathinthathu malar melae
Male : Mugil muththam pathinthathu malai melae
Un mudhal muththam pathinthathen idhazh melae
Male : Thaen kudam thaangiya maanthalir
Meaniyai naan thodum neraththilae
Female : Noolidai meloru naadagam
Nadanthathai kann sollum naanaththilae
Male : Aaa...aaah....aa...aa...aa...aa....
Thaen kudam thaangiya maanthalir
Meaniyai naan thodum neraththilae
Female : Noolidai meloru naadagam
Nadanthathai kann sollum naanaththilae
Male : Iravinil ragasiyam velippadumo
Female : Ilamaiyin adhisayam pulappadumo
Male : Vaa vaa ennai aadharikka nee vaa
Male : Vaa vaa ennai kadhalikka nee vaa
Female : Kani muththam pathinthathu kodi melae
Pani muththam pathinthathu malar melae
Male : Mugil muththam pathinthathu malai melae
Un mudhal muththam pathinthathen idhazh melae
Both : Laalaa lala laallaa....
Laalaa lala laallaa....
Kani Mutham Pathinthathu Song Lyrics in Tamil
பெண் : கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
ஆண் : முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே
பெண் : கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
ஆண் : முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே
பெண் : வா வா என்னை ஆதரிக்க நீ வா
ஆண் : வா வா என்னை காதலிக்க நீ வா
பெண் : லா லா லா லலலலா ஹ ஹ ஹ ஹ
ஆண் : ஆ......ஆ......ஆ......ஆ.....ஆ.....
பெண் : பூவிழியால் ஒரு ஓவியம்
வரைந்தேன் காதலன் உள்ளத்திலே
ஆண் : புன்னகையால் ஒரு காவியம்
வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே
பெண் : பூவிழியால் ஒரு ஓவியம்
வரைந்தேன் காதலன் உள்ளத்திலே
ஆண் : புன்னகையால் ஒரு காவியம்
வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே
பெண் : எழுதிய கவிதைக்கு பரிசென்னவோ
ஆண் : கொடுப்பதை கொடுத்தால் சுவையல்லவோ
பெண் : வா வா என்னை ஆதரிக்க நீ வா
ஆண் : வா வா என்னை காதலிக்க நீ வா
பெண் : கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
ஆண் : முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே
ஆண் : தேன் குடம் தாங்கிய மாந்தளிர்
மேனியை நான் தொடும் நேரத்திலே
பெண் : நூலிடை மேலொரு நாடகம்
நடந்ததை கண் சொல்லும் நாணத்திலே
ஆண் : ஆஅ...ஆஅஹ்....ஆ....ஆ....ஆ.....ஆ....
தேன் குடம் தாங்கிய மாந்தளிர்
மேனியை நான் தொடும் நேரத்திலே
பெண் : நூலிடை மேலொரு நாடகம்
நடந்ததை கண் சொல்லும் நாணத்திலே
ஆண் : இரவினில் ரகசியம் வெளிப்படுமோ
பெண் : இளமையின் அதிசயம் புலப்படுமோ
ஆண் : வா வா என்னை ஆதரிக்க நீ வா
பெண் : வா வா என்னை காதலிக்க நீ வா
பெண் : கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
ஆண் : முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே....
இருவர் : லாலா லல லால்லா.......
லாலா லல லால்லா.......
-  
- Description :
-  
- Related Keywords :