Mannavan Vanthaanae Song Lyrics
Album | Election |
Composer(s) | Govind Vasantha |
Singers | Haricharan, Shwetha Mohan |
Lyricist | Yugabharathi |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Mannavan Vanthaanae Song Lyrics By Yugabharathi
Mannavan Vanthaanae Song Lyrics in English
Chorus : {Kodimullai imaigal padapadakka
Kulir manjal mugamum sivanthirukka
Uravennum kayiru karam pidikka
Sugam vanthae uyiru siraiyedukka} – (3)
Female : Mannavan vanthaanae
Malligai poo polae
Nenjilae anantham
Koodum nannaalithae
Male : Kannilae orr vetkkam
Sinthiyae nee sella
Sorkkamae kai sera
Vaanae kondaaduthae
Female : Nooru nooru kadhai neeyum pesa
Mazhai mega thoranam kattaatho
Both : Ora ora vizhi kolam poda
Kadalosai kaigalai thattaatho
Male : Oo.....oo...oo....ooo.....
Chorus : Kodimullai imaigal padapadakka
Kulir manjal mugamum sivanthirukka
Uravennum kayiru karam pidikka
Sugam vanthae uyiru siraiyedukka
Female : Maayavan maarbilae
Maanthalir nee vizha
Kaayame aagidaa
Kathalai kaattuvaan
Female : Naaname naani odida
Naayagan aasai koodida
Paathi theriya meethi puiriya
Inba nathi paayalaam
Both : Koondhaludan meesai mothida
Male : Kollaiyida kaigal kodhida
Both : Kaalam muzhuthum
Kaanum sugaththil
Kannmayangi thoongaamal
Female : Alavillaa magizhvu edhuvarai
Valaiyosai sinungum adhuvarai
Mudivillaa sugamum edhuvarai
Kolusaasai kulungum adhuvarai
Kannellaam kurumbu edhuvarai
Pudhu pattu kasangum adhuvarai
Thadupillaa thazhval edhuvarai
Thalai kodhum viralgal athuvarai
Male : Vaazhum varai vaazhnthae pogaamal
Vaari tharuvaene naan ennai
Female : Pothum ena nee koorinaalum
Kadhal oyaathae
Male : Thevai ena ketkum munnaalae
Thenil unnai moozhga seivenae
Both : Thedhi kizhamai theerntha pothum
Paasam theeraathe
Female : Kodugalai thaandidaamale
Kolamida naanum yaenginaal
Kodi varuda thavamum varamaai
Nerungi varume
Male : Naanum unathu tholil sernthida
Maalaiyena maari vaazhnthida
Both : Kodai veyilum kulira kulira
Mazhaiyai tharumae
Female : Alavillaa magizhvu edhuvarai
Valaiyosai sinungum adhuvarai
Mudivillaa sugamum edhuvarai
Kolusaasai kulungum adhuvarai
Kannellaam kurumbu edhuvarai
Pudhu pattu kasangum adhuvarai
Thadupillaa thazhval edhuvarai
Thalai kodhum viralgal athuvarai
Mannavan Vanthaanae Song Lyrics in Tamil
குழு : {கொடிமுல்லை இமைகள் படபடக்க
குளிர் மஞ்சள் முகமும் சிவந்திருக்க
உறவென்னும் கயிறு கரம் பிடிக்க
சுகம் வந்தே உயிரு சிறையெடுக்க} – (3)
பெண் : மன்னவன் வந்தானே
மல்லிகை பூ போலே
நெஞ்சிலே ஆனந்தம்
கூடும் நன்னாளிதே
ஆண் : கண்ணிலே ஓர் வெட்கம்
சிந்தியே நீ செல்ல
சொர்க்கமே கை சேர
வானே கொண்டாடுதே
பெண் : நூறு நூறு கதை நீயும் பேச
மழை மேக தோரணம் கட்டாதோ
இருவர் : ஓர ஓர விழி கோலம் போட
கடலோசை கைகளை தட்டாதோ
ஆண் : ஓ.....ஓ......ஓ.....ஓஒ.....
குழு : கொடிமுல்லை இமைகள் படபடக்க
குளிர் மஞ்சள் முகமும் சிவந்திருக்க
உறவென்னும் கயிறு கரம் பிடிக்க
சுகம் வந்தே உயிரு சிறையெடுக்க
பெண் : மாயவன் மார்பிலே
மாந்தளிர் நீ விழ
காயமே ஆகிடா
காதலை காட்டுவான்
பெண் : நாணமே நானி ஓடிட
நாயகன் ஆசை கூடிட
பாதி தெரிய மீதி புரிய
இன்ப நதி பாயலாம்
இருவர் : கூந்தலுடன் மீசை மோதிட
ஆண் : கொல்லையிட கைகள் கோதிட
இருவர் : காலம் முழுதும்
காணும் சுகத்தில்
கண்மயங்கி தூங்கலாம்
பெண் : அளவில்லா மகிழ்வு எதுவரை
வளையோசை சினுங்கும் அதுவரை
முடிவில்லா சுகமும் எதுவரை
கொலுசாசை குலுங்கும் அதுவரை
கண்ணெல்லாம் குறும்பு எதுவரை
புது பட்டு கசங்கும் அதுவரை
தடுப்பில்லா தழுவல் எதுவரை
தலை கோதும் விரல்கள் அதுவரை
ஆண் : வாழும் வரை வாழ்ந்தே போகாமல்
வாரி தருவேனே நான் என்னை
பெண் : போதும் என நீ கூறினாலும்
காதல் ஓயாதே
ஆண் : தேவை என கேட்கும் முன்னாலே
தேனில் உன்னை மூழ்க செய்வனே
இருவர் : தேதி கிழமை தீர்ந்த போதும்
பாசம் தீராதே
பெண் : கோடுகளை தாண்டிடாமலே
கோலமிட நானும் ஏங்கினாள்
கோடி வருட தவமும் வரமாய்
நெருங்கி வருமே
ஆண் : நானும் உனது தோளில் சேர்ந்திட
மாலையென மாறி வாழ்ந்திட
இருவர் : கோடை வெயிலும் குளிர குளிர
மழையை தருமே
பெண் : அளவில்லா மகிழ்வு எதுவரை
வளையோசை சினுங்கும் அதுவரை
முடிவில்லா சுகமும் எதுவரை
கொலுசாசை குலுங்கும் அதுவரை
கண்ணெல்லாம் குறும்பு எதுவரை
புது பட்டு கசங்கும் அதுவரை
தடுப்பில்லா தழுவல் எதுவரை
தலை கோதும் விரல்கள் அதுவரை
-  
- Description :
-  
- Related Keywords :