Thangam Vilaiyum Song Lyrics
Album | Edhaiyum Thangum Ithayam |
Composer(s) | T R Pappa |
Singers | T M Soundarajan |
Lyricist | A Maruthakasi |
Language | Tamil |
Release Year | 1962 |
-  
- Thangam Vilaiyum Song Lyrics By A Maruthakasi
Thangam Vilaiyum Song Lyrics in English
Male : Thangam vilaiyum thirunaadu
Indha naadu en thaai naadu
Naan thangiyirukkathaan enakkillai
Ingae oru veedu
Male : Thangam vilaiyum thirunaadu
Indha naadu en thaai naadu
Naan thangiyirukkathaan enakkillai
Ingae oru veedu
Male : Thangam vilaiyum thirunaadu
Indha naadu en thaai naadu
Male : Andhi varaiyilum kanji kavalaiyae
Azhiyaa perungavalai
Poluthaana pinnalae thalaiyai saaikkavae
Aaradi idangavalai
Male : Sandhupondhugal paadhaiyil thoonga
Sattam idam thara villai
Samathuvam enbathu vaarthaiyil irukkum
Vazhkkaiyilae illai
Male : Thangam vilaiyum thirunaadu
Indha naadu en thaai naadu
Naan thangiyirukkathaan enakkillai
Ingae oru veedu
Male : Ellorum innaattu mannargal endrae
Maedaiyil muzhangukindraar
Adhai yettilum ezhudhi kaasaakki thanadhu
Vayittirkku vilungukindrar
Male : En pondra mannargal ethanai kodi
Enbathu theriyadha
Indha unmaiyai moodi maraithaalum
Ezhaikku puriyaadha
Male : Thangam vilaiyum thirunaadu
Indha naadu en thaai naadu
Naan thangiyirukkathaan enakkillai
Ingae oru veedu
Thangam Vilaiyum Song Lyrics in Tamil
ஆண் : தங்கம் விளையும் திருநாடு
இந்த நாடு என் தாய்நாடு
நான் தங்கியிருக்கத்தான் எனக்கில்லை
இங்கே ஒரு வீடு.......
ஆண் : தங்கம் விளையும் திருநாடு
இந்த நாடு என் தாய்நாடு
நான் தங்கியிருக்கத்தான் எனக்கில்லை
இங்கே ஒரு வீடு.......
ஆண் : தங்கம் விளையும் திருநாடு
இந்த நாடு என் தாய்நாடு
ஆண் : அந்தி வரையிலும் கஞ்சிக் கவலையே
அழியாப் பெருங்கவலை
பொழுதான பின்னாலே தலையை சாய்க்கவே
ஆறடி இடங்கவலை
ஆண் : சந்துபொந்துகள் பாதையில் தூங்க
சட்டம் இடம் தரவில்லை
சமத்துவம் என்பது வார்த்தையிலிருக்கும்
வாழ்க்கையிலே இல்லை......
ஆண் : தங்கம் விளையும் திருநாடு
இந்த நாடு என் தாய்நாடு
நான் தங்கியிருக்கத்தான் எனக்கில்லை
இங்கே ஒரு வீடு.......
ஆண் : எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்றே
மேடையில் முழங்குகின்றார்
அதை ஏட்டிலும் எழுதி காசாக்கித் தனது
வயறிற்கு விழுங்குகின்றார்
ஆண் : என் போன்ற மன்னர்கள் எத்தனை கோடி
என்பது தெரியாதா
இந்த உண்மையை மூடி மறைத்தாலும்
ஏழைக்கு புரியாதா........
ஆண் : தங்கம் விளையும் திருநாடு
இந்த நாடு என் தாய்நாடு
நான் தங்கியிருக்கத்தான் எனக்கில்லை
இங்கே ஒரு வீடு.......
-  
- Description :
-  
- Related Keywords :